Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில், 8,000 ஹெக்டயருக்குக் கிடைக்க வேண்டிய பசளையில், 80 சதவீதமே கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் சி.புனிதகுமார், இது தொடர்பாக மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற வவுனிக்குளம் சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு, விரைவாக உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் வழமைபோன்று, கமநலசேவை நிலையங்கள் ஊடாக, உரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், காணிப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் கூட, இறுதியில் இந்த விவகாரங்கள், மீண்டும் கமநலசேவை நிலையங்களுக்கே வருகின்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், விவசாயிகள் விதை நெற்செய்கையில் கூடுதலாக ஈடுபட வேண்டுமெனத் தெரிவித்த அவர், கால்நடைக் கட்டுப்பாடு அவசியமானதெனவும் அறிவுறித்தினார்.
கால்நடை, காட்டு மிருகங்களால் பயிர்ச்செய்கைக்கு அழிவு ஏற்பட்டால், விரைந்து கமநல சேவை நிலையங்களில், அது தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தாமதங்கள் ஏற்படுமானால், இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.
17 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025