Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு தெரிவுசெய்யப்பட்டது. 27ஆம் திகதி மாலை மாவீரர் பசீலன் அவர்களின் தாயார் பொதுச்சுடரை ஏற்றவுள்ளார்.
முள்ளியவளையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த முறை அரசியல் கட்சியோ அரசியல் சார்ந்தவர்ளோ விளக்கேற்றவில்லைஎன்பதையும் மாவீரரின் தாயார்தான் பொதுச்சுடரினை ஏற்றவுள்ளார் என்பதையும் பணிக்குழு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ள நிலையில் குறித்த துயிலுமில்ல காணியில் ஒரு பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுக்காக மாவீரர் பெற்றோர் உறவுகளால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்,முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டிற்காக 11 பேர் கொண்ட பணிக்குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பல ஆயிரக்கணக்காக வித்துடல்கள் புதைக்கப்பட்ட இந்த பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடாகி வருகின்றது என்பதையும் இதில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை வந்து மாவீரர் வணக்க நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் பணிக்குழு அறிவித்துள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago