2025 மே 19, திங்கட்கிழமை

பச்சிலைப்பள்ளியின் பாதீடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தலைமை அலுவலகம், புலோப்பளை உப அலுவலகம், புலோப்பளை பொது நூலகம், முள்ளிப்பற்று உப அலுவலகம், முள்ளிப்பற்று பொது நூலகம், முகமாலை உப அலுவலகம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

டிசெம்பர் 9ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ள இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், பொதுமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை யும் ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க முடியுமென, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X