2021 மே 08, சனிக்கிழமை

பச்சிலைப்பள்ளியில் குடிநீர் விநியோகம்

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில், தற்போது நிலவும் வறட்சியான காலநிலையைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக, ஆறு கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகாவில் பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேருக்கும், தர்மகேணிப்பகுதியில் 150 பாடசாலை மாணவர்களுக்கும், தம்பகாமம் பகுதியில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேருக்கும், புலோப்பளை மேற்குப்பகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 38பேருக்கும், அல்லிப்பளைப்பகுதியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேருக்கும், இத்தாவில் பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேருக்கும், குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X