Princiya Dixci / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, மதவளசிங்கன் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் படைப்புழுத் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமது நெற்செய்கைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதும், அவர்களால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பொய்த்துப்போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, படைப்புழுவால் பாதிக்கப்பட்டுள்ள தமது விவசாய நிலங்களை, உரிய அதிகாரிகள் நேரடியாக வருகைதந்து பார்வையிடுவதுடன், படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago