2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பட்டப்பகலில் மரக்கடத்தல்: அதிகாரிகளும் துணைபோவதாக மக்கள் குற்றச்சாட்டு

George   / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் பெருமளவான பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள், பொலிஸாரின் துணையுடனேயே கடத்தப்பட்ட வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் பெறுமதி வாய்ந்த முதிரை, பாலை போன்ற காட்டுமரங்கள் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்றன.

“குறிப்பாக பகல் வேளைகளில் காடுகளில் வெட்டப்படும் மரங்கள், எந்தவித அனுதிப்பத்திரங்களுமின்றி மிகவும் பாதுகாப்பான முறையில் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன ” என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, தமது காணிகளில் உள்ள மரங்களை தமது வீட்டுத்திட்டத் தேவைகளுக்கு வெட்டுவதற்கு அனுமதிகள்  வழங்கப்படுவதில்லை  என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம்  மற்றும் பொலிஸாரின் கண்காணிப்புக்கள் உள்ள  நிலையில்  இவ்வாறு சட்டவிரோதமாக மரங்கள் பகிரங்கமாக கடத்தப்படுவதாகவும்  இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளின் துணையுடன் இவை இடம்பெறுவதாக  இப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .