2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பண்டிகைக் கால வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கீடு

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

நத்தார், புது வருடத்தை முன்னிட்டு, பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்வதற்கென, மன்னார் நகரசபைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கேள்விப்பத்திர அடிப்படையில், தற்காலிக வியாபார நிலையங்களை அமைப்பதற்கு, மன்னார் நகர சபையால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 301 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைப்பதற்​கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வியாபார நிலையங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, உள்ளூர், வெளி மாவட்ட வர்த்தகர்களிடம் இருந்து, மன்னார் நகர சபையினரால், கேள்விப்பத்திர அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இதனடிப்படையில், மன்னார் நகரசபை மண்டபத்தில், இன்று (18) முற்பகல் 10 மணியளவில், மன்னார் நகர சபைத் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தலைமையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒரு வியாபார நிலையத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, ஆகக்கூடிய கேள்வித் தொகைக்கு விண்ணப்பித்த வர்த்தகர்களுக்கு, வியாபார நிலையம் அமைப்பதற்கான இடம் வழங்கப்பட்டது.

பண்டிகைக்கால வியாபாரத்துக்காக, தற்காலிக இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்கள், வர்த்தக நிலையங்களை அமைத்து, நாளை மறுதினம் (20) முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரையில், தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென, மன்னார் நகரசபைத் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவித்தார்.

அத்துடன், வியாபார நிலையங்களைப் பெற்றுக்கொள்வோர், பிரிதொரு நபருக்கு வியாபார நிலைய இடங்களைக் கைமாற்றும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரித்த தவிசாளர், குறித்த இடம், நகர சபையால் மீளப் பெற்றுக்கொள்ளப்படுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .