2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எச்சரிக்கை

Freelancer   / 2023 ஜூன் 13 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீளாய்வுசெய்யப்பட்டது.

அந்தவகையில் தனியார் மருந்தகங்களில் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர்கள் இல்லாமல் மருந்துகள் வழங்கபடுகின்ற விடயம் தொடர்பாக பரீசீலிக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியாவில் 19 தனியார் மருந்தகங்கள் உள்ளது. அவற்றில் 8 மருந்தகங்கள் பதிவுசெய்யப்படவில்லை. அவற்றில் 5 மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய மூன்று மருந்தகங்கள் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை எமக்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன் இங்கு இரண்டு மொத்தவியாபார மருந்தகங்கள் உள்ள நிலையில். அதில் ஒன்று பதிவுசெய்யப்படவில்லை. அதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.

இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் உரியநேரத்திற்கு முன்பாகவே மூடப்படுவதாக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .