2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பனங்கட்டிக்கோட்டில் இரு குழுக்கள் அட்டகாசம்: 25 பேர் கைது

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பனங்கட்டிக்கோடு கிராமத்தில், கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்த இரு குழுக்களுக்கிடையிலான மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில், அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் என 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்' என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாட்டு நிகழ்வொன்றின் போது, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பாரிய கைகலப்பாக மாறியதை அடுத்து, தொடர்ச்சியாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளது.

இக்குழுக்களுக்கிடையில் மாறி மாறி ஏற்பட்ட கைகலப்பின் போது காயமடைந்த பலர், மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார், குறித்த கிராமத்தில் அமைதியினை நிலை நாட்டும் பொருட்டு பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குறித்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்து வன்முறையில் ஈடுபட்ட 25 பேரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த 25 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார், சந்தேகநபர்களை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .