2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிப் பட்டறை

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

தேசியச் சிறுவர் பாதுகாப்பு  அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில்,  “சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்ட பொலிஸாருக்கான பயிற்சிப் பட்டறையொன்று, கிளிநொச்சி மாவட்டச் செயலகப் பயிற்சி மண்டபத்தில் இன்று (30) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்டச் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் டீ.ஆர்.தர்மதாஸ வளவாளராகக் கலந்துகொன்டு, விளக்கமளித்தார்.

இதில், மாவட்டத்தில் கடமையாற்றும் 60 பொலிஸார் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட உதவிப் பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு  அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் செந்தூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X