எஸ்.என். நிபோஜன் / 2019 ஜூலை 01 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து பொருட்களை ஏற்றி சென்ற இரு பார ஊர்திகளே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
முன்னே சென்ற பார ஊர்தியின் சக்கரத்திலிருந்து காற்று வெளியேறியதில், சடுதியாக குறித்த பார ஊர்தி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பார ஊர்திக்கு பின்புறமாக சென்ற மற்ற பார ஊர்தி பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாரஊர்தியில் பயணித்த சாரதி உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025