Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (18)இடம்பெற்ற பரவிப்பாஞ்சான் மக்களுடனான கலந்துரையாடலிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க கோரி மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த போது அவர்களை சந்திக்க கோரியிருந்தனர். எனினும் உடனடியாக என்னால் வர முடியவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பரவிப்பாஞ்சானிலும் 17 ஏக்கர் காணி விடுவிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள சகல காணிகளும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago