Editorial / 2019 மே 15 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து, நேற்று (14) இரவு, நான்கு கூரிய வாள்கள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.
சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே, நேற்று (14) இரவு கைவிடப்பட்ட நிலையில் மர்மபொதி ஒன்று காணப்படுவதாக, பூவரசங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இராணுவத்தினருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த மர்ம பொதியைச் சோதனை செய்தபோது, அதிலிருந்து நான்கு கூரிய வாள்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த போதும், சந்தேகத்தின் பேரில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago