2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

’பஸ் தரிப்பு நிலையம் அமைக்க நிதி கிடைக்கும்’

Editorial   / 2017 ஜூலை 08 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பஸ் தரிப்பிடம் அமைக்க எதிர்வரும் வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும் என நம்புவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையிலே இதுவரையில்  பஸ் தரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படாத நிலை காணப்படுகிறது இப்போதுதான் பஸ் தரிப்பு நிலையத்துக்கான இடம் தெரிவு செய்யப்பட்டு அந்த நிலம் செப்பனிடப்பட்டு வருகிறது.

“இதன் பின்னர் தான் அதற்குரிய நிதியை பெறுவதற்குரிய ஒழுங்குகளை மேற்க்கொள்ளவேண்டிவரும் தேசிய போக்குவரத்து அதிகாரசபை ஊடாக தான் இந்த வேண்டுகோளை விடுக்கவேண்டியுள்ளது. அதன் மூலமாக அடுத்த வருடம் இதற்கான நிதியை பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .