Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியின் பூநகரி, முழங்காவில் பஸ் நிலையங்களில் பஸ்கள் தரித்துச் செல்வதில்லையென குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். பூநகரியின் பஸ் நிலையம், முழங்காவில் பஸ் நிலையம் என்பன 2010ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் இடையில் ஏ-32 சாலையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்கள், பஸ் நிலையங்களுக்குள் செல்வதில்லையெனவும், சில வேளைகளில் பஸ்கள் நிறுத்தாமல் செல்வதாகவும் பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குறைபாடுகள் தொடர்பாக, பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்ட போதிலும், இதுவரை தீர்வுகள் காணப்படவில்லை. பெருமளவு நிதி செலவீடு செய்து அமைக்கப்பட்ட பஸ் நிலையங்கள் பயனற்றதாகவே காணப்படுவதாகவும், தெரிவிக்கும் மக்கள் குறித்த பஸ் நிலையங்களில் பஸ்கள் வந்து செல்வதற்கான ஒழுங்குகளை அதிகாரிகள் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
7 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago