க. அகரன் / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, ஒமந்தை, ஏ9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று, பால் பவுஸருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து, இன்று (30) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், ஓமந்தை - பன்றிக்கெய்த குளம் பகுதியில் வைத்து, எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த பால் பவுஸருடன் மோதி, விபத்துக்குள்ளானது.
இதனால் குறித்த பஸ்ஸில் பயணித்த 24 பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, கடந்த 5 நாட்களுக்கு முன்னர், ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று தாண்டிக்குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்நிருந்தனர். மேலும், ஒரு மாதத்துக்கு முன்னரும், புளியங்குளத்தில் வைத்து இவ்வாறு விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025