Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2019 ஜூன் 27 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழித்தடங்களில் பஸ்களின் போக்குவரத்திற்கு தடைகள் உருவாக்கப்பட்டால் வடமாகாண போக்குவரத்து அமைச்சுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நட்டாங்கண்டலில் இருந்து கடந்த 24ந் திகதி துணுக்காய அக்கராயன் பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கு ஆரம்பிக்கப்பட்ட தனியார் பஸ் சேவையினை நடாத்த வேண்டாம் என யாழ்ப்பாணத்திலும் துணுக்காயிலும் தனியார் பஸ் சங்கங்கள் தடைகளை உருவாக்கியமை தொடர்பாக மாவட்டச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பஸ்களுக்கான வழித்தட அனுமதிகளை மாவட்டச் செயலகம் வழங்குவதில்லை. அது போக்குவரத்துடன் தொடர்புடைய திணைக்களங்கள் வழங்கும். மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடிகள் உள்ள கிராமங்கள் பஸ் சேவைகள் நடாத்தப்பட வேண்டும் என்ற சிபார்சுகளை மட்டும் நான் மேற்கொள்வேன்.
பஸ் சேவைகளில் ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் தொடர்பாக போக்குவரத்துடன் தொடர்புடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நட்டாங்கண்டலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆரம்பிக்கப்பட்ட தனியார் பஸ் சேவை இருநாட்களில் இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக நட்டாங்கண்டல், ஒட்டங்குளம், துணுக்காய், ஆலங்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், கிளிநொச்சியின் அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், முக்கொம்பன், சின்னப்பல்லவராயன்கட்டு, பூநகரி ஆகிய கிராமங்களின் மக்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய தனியார் பஸ் சங்கங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
வழித்தடத்தில் தனியார் பஸ்ஸோ இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸோ பணியில் ஈடுபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
35 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago