Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா, ஆச்சிபுரம் கிராம மக்கள், பஸ்ஸை மறித்து, நேற்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“வவுனியாவிலிருந்து புறப்படும் பஸ், ஆச்சிபுரத்தினூடாக சென்று சிதம்பரபுரத்தை அடையவேண்டிய போதிலும் ஆச்சிபுரத்தினூடாக செல்லாமல் பிரதான வீதியால் செல்வதால் ஆச்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்” என ஆர்ப்பட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களும் பல கிலோமீற்றர் தூரம் நடந்தே பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள், பஸ்ஸை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் வவுனியா, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சம்பவ இடத்துக்கு வந்து தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
அதனையடுத்து, பாடசாலை நேரத்தில் குறித்த கிராமத்தின் ஊடாக பஸ்ஸை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago