Freelancer / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காற்றுடன் கூடிய மழை காரணமாக கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் மரங்கள் முறிந்து வீழ்ந்து உள்ளதாக கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் தெரிவித்தார்.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் கடந்த ஒரு வார காலத்தில் இடம் பெற்ற புயலுடன் கூடிய மழை காரணமாக பாடசாலைகளில் சேதங்கள் ஏற்பட்டதாக பாடசாலை அதிபர்களினால் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை சூழலை அழகாக வைத்திருப்பதற்காக நாட்டியிருந்த மரங்களே முறிந்து வீழ்ந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 1,000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இது ஒரு தேசிய பாடசாலையாகும். கடந்த போர் காலத்தில் இப்பாடசாலை பெரும் அழிவுகளை எதிர்கொண்ட நிலையில் 2009ஆம் ஆண்டின் பின்னர் இப்பாடசாலையின் சூழலை அழகுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் கவலையினை உருவாக்கியுள்ளது.
26 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
33 minute ago