Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25க்கு மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் உள்ளனவென சுட்டிக்காட்டியுள்ள மக்கள், இதில் பல முக்கியமான வீதிகளை ஊடறுத்து நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடந்த காலங்களில் பல விபத்துகளும் இடம்பெற்று பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள பிரதேச மக்கள், உயிராபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, பாதுகாப்பான ரயில் கடவைகளை ஏற்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .