2025 மே 01, வியாழக்கிழமை

பாவற்குளத்தின் வான்கதவுகள் திறப்பு

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியாவின் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் 3 வான் கதவுகளும், இன்று (13) மத்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்களால் திறக்கப்பட்டன.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக, பாவற்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், ராஜேந்திரன்குளம் மற்றும் கல்லாறு அணைக்கட்டு ஆகிய குளங்கள் வான் பாய்ந்து வருகின்ற நிலையில், பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தது.

இதன் காரணமாக, இன்று அதிகாலை,  பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகளும் ஓர் அடிக்கு திறக்கப்பட்டன.

வவுனியாவில் தொடர்ச்சியாக அடைமழை பெய்துவரும் நிலையில் பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தால், மீண்டும் வான்கதவுகள் மேலதிகமாக திறக்கப்படுமென, மத்திய நீர்ப்பாசத் திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் கெ.இமாசலன் தெரிவித்தார்.

இதனால், தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவர் அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .