Freelancer / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு - விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது-33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை(7) காலை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார், இது விபத்தா அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
27 Jan 2026