2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர்

George   / 2017 மே 22 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

--எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் கிராமத்தில், 30 வருடங்களாக இருந்துவரும் பிள்ளையார் கோவில் காணியை, கடந்த எட்டு வருடங்களாக, புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணப்பட்ட அரச மரத்துக்கு அருகில், கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார்  கோயில் ஒன்று காணப்பட்டிருந்தது.  கிராமத்தைச் சேர்ந்த தனியார் ஒருவரே,தனது காணியை பிள்ளையார் கோயிலுக்காக வழங்கியிருக்கின்றார்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறித்த கிராம மக்கள் மீள்குடியேறிய பின்னர், பிள்ளையார் கோயில் இருந்த அரச மரத்துக்கருகில், புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். அத்துடன், அதே காணியில், விகாரையொன்று அமைக்கப்பட்டு, அதற்கருகில், வடக்குத் திசையை நோக்கியவாறு, சிறியளவில் பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு, அதில், மேற்படி கோயிலிலிருந்த சிலை வைக்கப்பட்டிருந்தது.

கிழக்குத் திசை பார்த்திருந்த பிள்ளையார், தற்போது வடக்கு திசைக்கு திருப்பப்பட்டுள்ள நிலையில், புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை, கிழக்குத் திசை நோக்கிப் பார்த்தபடி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவ்விடத்தில் மீண்டும் பிள்ளையார் கோயில் அமைக்க முடியாது என்பதால், தற்போதுள்ள கோயிலை, ஆகம விதிப்படி கிழக்கு திசைக்கு மாற்றி அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு, இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X