Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை, மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற கடும் விவாதத்தால், சபை அமர்வில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
மன்னார் நகர சபையின் 6ஆவது அமர்வு இன்று (20) காலை 10.30 மணியளவில், மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், பிரேரணைகளை முன் வைத்து உரையாற்றியபோது, போதே சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இதன்போது, நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் உரையாற்றுகையில்,
அனைத்து உள்ளூராட்சி மன்ற மண்டபங்களிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவெனவும் எனவே, மன்னார் நகர சபை சபா மண்டபத்திலும் அவர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் வழங்கிய நகர சபை தவிசாளர், உள்ளூராட்சி அமைச்சு வடமாகாண சபையிலேயே இருக்கின்றதெனவும் எனவே, முதலாவதாக முதலமைச்சரின் புகைப்படமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அதற்கு எமக்கு உடன்பாடில்லையெனத் தெரிவித்த அவர், முதலாவது நகர தவிசாளரின் புகைப்படம் இங்கே வைக்க வேண்டிய கடமை உள்ளதெனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வருகின்ற நகர சபை தவிசாளர்களுடைய புகைப்படங்களும் இங்கே வைக்கப்படுமெனவும் எனவே நகர சபை தவிசாளர் என்ற வகையில் இங்கே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேனெனவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது சபையின் உறுப்பினர்கள் சிலர், புகைப்படங்கள் காட்சிப்படுத்துவதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, உறுப்பினர்களின் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025