2025 மே 09, வெள்ளிக்கிழமை

’புதிய திருத்தச் சட்டம் வந்துள்ளது’

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளாக, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளின்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்   உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, வவுனியாவில், நேற்று  (10) நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி மாவட்டத்தில், பொருளாதார, அரசியல் சமூகப் பிரச்சினைகளை கட்சி ரீதியான பிரிவினைகளை கொண்டு பார்த்தால், மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் போகும் என்றார்.

இதேவேளை, கைதிகள் தொடர்பில் தான் எடுத்த முயற்சி காரணமாக, 16 கைதிகளை அண்மையில் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர்.  இதன் பணி மேலும் தொடருமென்றும் ஜனவரி மாதத்துக்குகுள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோமெனவும் கூறினார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளாகத் தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிலையம் முழுமையாக இயங்கும் வகையில் தடைகளை நீக்கியிருக்கின்றோமமெனவும் கூறினார்.

இதேவேளை, 'பெசில் மீது இருக்கும் நம்பிக்கை மூலமாக  பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரக்கூடிய திட்டங்களை எடுப்பதற்கான  முழுமையான பொறுப்பை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் முன்வந்துள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் அவரது வருகையின் நன்மையை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

'இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி 45 புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார். எனவே, புதிய அமைச்சுகளை உருவாக்குவதோ அல்லது புதியவருக்கு அமைச்சு பதவியை வழங்குவதோ அரசியலில் புதியவிடயமல்ல' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X