2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் கசிப்பு வியாபாரம் மும்முரம்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரம், கிராமங்கள் தோறும் அதிகரித்துக் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம், கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வழக்குகள் 25 பதிவாகியுள்ளனவென, புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம், மூங்கிலாறு, தேவிபுரம், விசுவமடு, மாணிக்கபுரம், இருட்டுமடு, வெள்ளப்பள்ளம், ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில் கசிப்பு உற்பத்திகளும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்படுவதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .