Niroshini / 2021 ஜூலை 26 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் கொரோனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகரை அண்மித்த பகுதியில், அண்மையில் வெளிநாட்டில் இருந்து பலர் வந்துள்ளார்கள். இந்நிலையில் ஏற்பட்ட தொற்றின் பரவலால் அவர்களது குடும்பம் மற்றும் சொந்தங்கள் என இதுவரை 8 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இவர்களுடன் தொடர்புடைய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நாளை (27) அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago