Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்விகற்கும் உயர்தர மாணவன் கௌரிதாசன் கரிஸ்(17 வயது) நேற்று முன்தினம் (18) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீதியில் வைத்து குறித்த மாணவன் மீது இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமான தாக்கியதில் காயமடைந்த மாணவன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதேவேளை மாணவன் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று (19) மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்
மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025