Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பகுதியில், மரக்கறி இறக்குமதியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதை அடுத்து, அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்குகின்ற அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும், நாளை மறுதினம் (30) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு பிசிஆர் பரிசோதனைகளை செய்யாமல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்படுமெனவும்,; எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago