Editorial / 2024 ஜனவரி 19 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதியை புதுக்குடியிருப்பு பொலிஸார் வியாழக்கிழமை (18) மாலை மீட்டெடுத்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மல்லிகைத்தீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத் தலைமையிலான பொலிஸார் விரைந்து சென்று குறித்த பொதியை மீட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட பொதியினுள் துப்பாக்கி ரவைகள் 37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன். குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025