Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 24 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையால், முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும் கொரோனாக் கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தடுப்பதற்கான தயார்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக,முல்லைத்தீவு மாவட்டத்தில், மருத்துவ ரீதியான பாதுகாப்பு வளப்பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில், அவற்றை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், மாவட்டத்தில், என்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றவர்கள் உட்பட குறித்த ஆடைத்தொழிற்;சாலையில் பணியாற்றியவர்களில் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் முதற்தொற்றாளர்கள் என சுமார் 4,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.
மேலும், தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திம்பிலி கொரோனா வைத்தியசாலையும் வேணாவில் பகுதியில் உள்ள வைத்தயசாலையும் தயார் நிலையில் உள்ள அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, மாங்குளம் வைத்தியசாலை என்பனவும் மருத்துவ ரீதியான தயார்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago