2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்ட முயற்சித்தோர் கைது

Niroshini   / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில், புதையல் தோண்ட முயற்சித்த நால்வர், நேற்று  (18) இரவு 8.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் இருவர் வவுனியா, ஏனையோர் யாழ்ப்பாணம், விசுவமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென, தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்று  கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X