Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை - யூட்ஸ் வீதி அருகே உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட 6 நபர்கள், பேசாலை பொலிஸாரால், சனிக்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நவீன கருவியொன்றை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பேர், அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் ஏனையோர், பேசாலை - நடுக்குடா, வசந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள், நேற்று (14) மாலை, மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை, பதில் நீதவான் பிணையில் விடுவித்தார்.
25 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
42 minute ago