2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புரெவி புரட்டிய படகுகளால் நட்டம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில், வீசிய புரெவிப் புயல் காரணமாக 30 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட நட்டம் ஏற்பட்டுள்ளதாக வலைப்பாடு மீனவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வலைப்பாடு கிராமத்தில் வீசிய காற்றின் காரணமாக 40 வரையான மீன்பிடி படகுகள் முழுமையாகவும் மேலும் 40 வரையான படகுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் 45 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதாகவும் வலைப்பாடு மீனவர் சங்கத்தின் தலைவர்  தெரிவித்தார்.

இதேவேளை, வலைப்பாடு பகுதியில் 35 மீன்பிடி மற்றும் 41 வரையான தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணைகளும் சேதமடைந்துள்ளன.

இவை தவிர, 36 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார தொழிலான பாசி வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X