Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 11 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சாவகச்சேரி நகரசபை பகுதியில், சிறுவர் பூங்கா அமைப்பதற்கென காணி வழங்க விரும்புவோர், நகர சபையுடன் தொடர்புகொள்ளுமாறு, நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி நகரசபை பகுதியில், சிறுவர் பூங்காவொன்றை அமைப்பதற்கு உரிய காணி வசதி கிடைக்காததால், இதுவரை காலமும் பூங்காவை அமைக்க முடியாதுள்ளது.
இந்நிலையில், மீசாலையில் இருந்து நுணாவில் வரையான முதன்மைச்சாலையுடன் இணைந்த நிலையில் காணி உள்ளவர்கள், அந்தக் காணியை வழங்க முன்வருவார்களாயின், நவீன வசதிகளுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க முடியும்.
எனவே, 12 பரப்புக்கு குறையாத காணியை வழங்க விரும்புவோர், நகர சபையுடன் தொடர்பு கொள்ளுமாறும் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டின் பிரகாரம், காணி கொள்வனவு செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025