Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதனால் குடிநீர் வழங்கமுடியாது என தெரிவித்து, பிரதேச சபையினால் தமக்கான குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு பகுதியில் மாதிரி கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் கடந்த 574 நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமது காணிகளை விடுவிக்கக்கோரி வீதியில் போராடி வரும் மக்கள் குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்தில் இரவு பகலாக தங்கி வீதியில் சமைத்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் போராட்டம் இடம்பெறும் இடத்தில் தேவையான குடிநீர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களால் வழங்கப்பட்டு அது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வரட்சியினால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தமக்கான தண்ணீர் பெற்றுக்கொள்வதால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமக்கான குடிநீரை வழங்குமாறு பிரதேச சபையிடம் தாங்கள் கேட்டபோது இது அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் என்பதால் தண்ணீர் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
தாம் எந்த அரசிற்கு எதிராகவோ அல்லது இராணுவத்திற்கு எதிராகவோ போராடவில்லை தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு தான்போராடி வருகின்றோம் என்பதை விளங்கிக்கொண்டு, தமக்கான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago