Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - ஒதியமலை, பெரியகுளம் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக மேற்படி கிராமங்களில் வாழ்கின்ற குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.
1984 டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்தில் இருந்து ஆறு தடவைகள் பெரியகுளம் கிராமம் வழியாக ஒதியமலைக் கிராமம் வரை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம் பெற்றன.
தற்போது 2010ஆம் ஆண்டின் பின்னர் பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கிராமங்களாக பெரியகுளம், ஒதியமலைக் காணப்படுகின்றன.
போக்குவரத்து நெருக்கடிகளைக் காரணங்காட்டியே ஒதியமலைப் பாடசாலைக்கு ஆசிரியர்கள் பணிக்கு வருவதில்லை. மேற்படி கிராமங்களின் பொதுமக்கள் வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு வந்து செல்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி கிராமங்களில் விளைகின்ற உற்பத்திப் பொருள்களை நெடுங்கேணி உட்பட வவுனியா, முல்லைத்தீவு நகரங்களுக்கு எடுத்துச் செல்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.
பஸ் சேவையை மேற்படி கிராமங்களுக்கு நடத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டும் பஸ் சேவைகள் இடம் பெறவில்லை என, மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago