Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – பூநகரி, முட்கொம்பன் பகுதியில் உள்ள மக்கள், தமது தேவைக்கான மணலைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்று மணலை ஏற்றும் போது, வனவளத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் அவற்றை கைப்பற்றி, பொதுமக்களை கைதுசெய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், தமது பிரதேசத்தில் இருந்து தினமும் டிப்பர் வாகனங்களில் வெளியிடங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இது தொடர்பில் பொலிஸாரோ அல்லது வனவளத்திணைக்கள அதிகாரிகளோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லையெனக் குற்றஞ்சாட்டினர்.
இதனால், வீட்டுத்திட்ட பயனாளிகள் தமது கட்டுமானத் தேவைகளுக்கான மணலை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025