2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘பொருளாதாரத்தில் முன்னேறுகின்ற சமூகமாக மாற வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டம் வறுமை இல்லாது, பொருளாதார ரீதியில், முன்னேறுகின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டுமெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கோதீஸ்வரன், அதற்காக இந்த சமுர்த்தியைப் பெற்றுக்கொண்டு, உங்கள் வாழ்கையை முன்னேற்ற வேண்டுமெனவும் கூறினார்.

ஒருதொகுதி சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி பத்திரம் வழங்கும் நிகழ்வு, நேற்று (27), புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீள்குடியேறிய ஆரம்ப நாள்களில்,  2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, வறுமையில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் பின்னர் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, இது இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது மகிழ்ச்சியைத் தந்தாலும் இன்றும் வறுமைகோட்டின் கீழ் இருக்கும் மாவட்டமாகவே காணப்படுவதாகத் தெரிவித்த அவர், போராலும் பல்வேறு இயற்கை அனத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய வகையில், சமூர்தி கொடுப்பனவு ஓருரளவு உங்கள் வறுமையை சரிப்படுத்துமெனவும் உங்கள் முயற்சியால் வறுமையில் இருந்து ஓராளவு மீண்டெழுகின்றவர்களாக மாற்றுவதாக அமையுமெனவும் கூறினார்.

வறுமை இல்லாது பொருளாதார ரீதியில் முன்னேறுகின்ற சமூகமாக தாங்கள் மாறவேண்டுமெனவும் அதற்காக இந்த சமுர்த்தியைப் பெற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X