Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை, வடக்கு - கிழக்கில் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோமென, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கில், யாழ். பஸ்ஸில் நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு ஐ.நாவுக்குக் கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம்.
அதேபோன்று கிழக்கிலும் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையளிக்கவுள்ளோம்.
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் முடிவடைந்துவிட்டது. இருந்தும் எமது பிள்ளைகளுக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கட்சி பேதமின்றி எமது உறவுகளை கேட்டு நிற்கும் எமக்காக குரல் கொடுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago