2025 மே 09, வெள்ளிக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

Niroshini   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம், கொலனி பகுதியில், போலி நாணய தாள்களை வைத்திருந்த 41 வயதான பெண் ஒருவர், இன்று  (05) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 500 ரூபாய் போலி நாணயத் தாள்கள் 17 மீட்கப்பட்டுள்ளன என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X