2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியும் சாரதியும் பலி

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, இலுப்பைக்கடவை சந்தியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இலுப்பைக்கடவை சந்தியில் வைத்து  பட்டா ரக வாகனத்தினை இடை மறித்த வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் அதிகாரிகள், சாரதியிடம் ஆவணங்களை பரிசோதனை செய்து கொண்டிருந்துள்ளார்.

அதன்போது மடு திருத்தலத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவர்கள் மீது மோதியுள்ளது.

அதில் வீதிப்போக்குவரத்து பிரிவு பொலிஸார் இருவர் மற்றும் பட்டா வாகன சாரதி ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது பட்டா ரக வாகனத்தின் சாரதி உயிரிழந்தார்.

அதனையடுத்து, போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் ஹயஸ் ரக வாகத்தில் பயணித்த யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஆகிய மூன்று பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார். அருட்தந்தை, மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .