2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புகைப்பிடிப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்

George   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு புகைப்பிடிப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்' எனத் தெரிவித்து விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வவுனியா சுகாதார பணிமனையில்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது லேன்ட் மாஸ்டர் வண்டியில் 'சிகரட் புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்' எனக்குறிப்பிட்ட பதாதைகள் தொங்கவிடப்பட்டு கேக் போன்று வடிவமைக்கப்பட்ட பெட்டி ஒன்று வைக்கப்பட்டு வவுனியா நகரை வலம் வந்தது. 

இதன்போது 'இன்று பிறந்தநாள்' என்று பாடலும் இசைக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X