2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக்குள் சென்ற குளவிகளால் 26 பேர் வைத்தியசாலையில்

Gavitha   / 2016 ஜூன் 13 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி கண்டாவளை மகா வித்தியாலயத்தைச் சேரந்த 23 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (13) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்று காரணமாக மேற்படி பாடசாலை வளாகத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து வகுப்பறைக்குள் குளவிகள் புகுந்துள்ளன.

அதன்போதே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .