2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் தொகை அதிகரித்துக் காணப்படும் பிரதேசமாக புதுக்குயிருப்பு பிரதேசம் காணப்படுகின்றது என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்;கையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகமாகக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாகவும் இதில் புதுக்குயிருப்பு பிரதேசத்தில் அதிக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 19 கிராமஅலுவலர் பிரிவுகளிலும் மீள்குடியேறியுள்ள 12 ஆயிரத்து 821 குடும்பங்களில் 1729 குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றன. இதில் யுத்தத்தினால் கணவனை இழந்தவர்களின் தொகை அதிகளவில் காணப்படுகின்றன.

இவற்றை விட விபத்துக்களால் குடும்பத் தலைவர்களை இழந்தவர்கள், காணாமல்போனவர்களின் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெண்களின் குடும்பங்களும் அடங்குகின்றன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், ஏராளமான குடும்பங்கள் பெரும் பொருளாதாரச் சுமைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதுடன் இளவயதினையுடைய பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பு பிரச்சினையாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .