Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிரவல் மண் அகழ்வினால் அழிவடைந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை நடுவதற்கு பிரதேச செயலகமும் மாவட்டச் செயலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் அக்கராயன் திருமுறிகண்டி வீதியில் அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் அதிகப்படியான கிரவல் மண் அகழ்வு இடம்பெற்றமையினால் பெருமளவு மரங்கள் அழிவடைந்துள்ளன.
இப்பகுதி தற்போது பாலைவனம் போன்று காட்சியளிக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் மரங்களை நடுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதன் மூலம் இப்பகுதியினை பசுமையாக மாற்ற முடியும்.
இதற்கான நடவடிக்கையினை துணுக்காய் பிரதேச செயலகமும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் எடுக்க வேண்டும்.
அத்துடன் இந்த கிராம அலுவலர் பிரிவில் மணல், கிரவல் அகழ்வுகள் நடைபெறுமானால் அதற்கு மாவட்டச் செயலகம் அனுமதி வழங்குமானால் எமது கிராம அபிவிருத்திச் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதன் மூலம் எமது கிராமத்தின் அழிக்கப்படும் வளங்கள் தொடர்பாக சரியான தகவல்களை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு வழங்க முடியும் என அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago