2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புதிய யுக்தியில் மணல் திருட்டு

George   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட ஆற்றுப்படுக்கைகளிலே அரிகற்களை உற்பத்தி செய்து புதிய முறையில் மணல் திருட்டு நடைபெறுகின்றது.

ஆற்றுப்பகுதிகளுக்கு சீமெந்துப் பைக்கற்றுகளைக் கொண்டு வருபவர்கள், ஆற்றுமணல்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் வைத்து அரிகற்களை உருவாக்கி அவற்றினை எடுத்துச் செல்கின்ற புதுவிதமான யுக்தியில் மணல் கொள்ளையை மேற்கொள்கின்றனர்.

மாவட்டத்தின் எந்த ஆற்றுப்பகுதியிலும் மணல் அகழ்வில் ஈடுபட முடியாது என்ற இறுக்கமான நடைமுறைகள் உள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

ஆற்றிலிருந்து மணலினை எடுத்துச் சென்று அரிகற்களை உருவாக்குவதும், சீமெந்தினை ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு வந்து கல்லினை உருவாக்குவதும் ஒரே மாதிரியான செயற்பாடே என்பதைக் கருத்திற் கொண்டு பொலிஸாரும் அதிகாரிகளும் இறுக்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரிகற்களை கொண்டு செல்லும் போது, பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லையென்பது குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .