2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பூநகரியில் 3.7,335 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்தில் 7 ஆயிரத்து 335 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 768 பேர் இதுவரையில் மீள்குடியேறியுள்ளதாக அப்பிரதேச செயலகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பூநகரிப் பிரதேசத்தில் 12 ஆயிரத்து 781 ஆண்களும் 12 ஆயிரத்;து 987 பெண்களுமாக மொத்;தம் 25 ஆயிரத்து 768 பேர் மீள்குடியேறியுள்ளனர்.

இவ்வாறிருக்க, இப்பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்காக 346 குடும்பங்களைச் சேர்ந்த 611 ஆண்களும் 621 பெண்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இரணைதீவு மற்றும் பூநகரி மட்டுநாடு ஆகிய பகுதிகளிலுள்ள இவர்களின் காணிகளானது கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் வசம் இருப்பதன் காரணமாக மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .