2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பூநகரியில் 490.1 கிலோமீற்றர் வீதி புனரமைக்க வேண்டியுள்ளது

Niroshini   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் 490.1 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் புனரமைக்க வேண்டிய தேவையுள்ளதாக பூநகரி பிரதேச செயலகப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியிலுள்ள 612.64 கிலோ மீற்றர் நீளமான 435 உள்ளக வீதிகள் உள்ளன. இவற்றில் 122.54 கிலோமீற்றர் நீளமான 48 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மிகுதி 490.1 கிலோ மீற்றர் 387 வீதிகள் புனரமைக்கவேண்டிய தேவையுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் பூநகரி பிரதேசத்தில் பெருமளவான உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பாக பூநகரி - பரந்தன் வீதியிலிருந்து கறுக்காய் தீவு செல்லும் வீதி புனரமைக்கப்படாமையினால் பெருமளவான குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இதேபோன்று, வினாசியோடை, கௌதாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பிரதான வீதிகளும் மிகமோசமான நிலையில் காணப்படுகின்றன.

இதனால் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் ஏராளமான குடும்பங்களும் தமது போக்குவரத்துக்களில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .