Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2016 ஜூன் 02 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது, பிரதேசத்தின் அபிவிருத்தி, வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, மாந்தை கிழக்கு, ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய 5 பிரதேச செயலகங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் இதுவரை நடாத்தப்படாமையால் அபிவிருத்தி, வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் தீர்மானிக்க முடியாத நிலை காணப்பட்டது. எனவே, பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களை இரண்டு வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago